தமிழகத்திற்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்தான். காரணம் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு நல்ல முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. திமுக சார்பாக மூன்று கேபினட் அமைச்சர்களும், நான்கு இணை அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். காங்கிரஸ் சார்பாக ஜிகே வாசன் அவர்கள் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றார். இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழர்களின் எண்ணிக்கை பத்தாக (புதுவையும் சேர்த்து) உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர்களுக்கான இலாக விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ககப்படுகிறது.
கேபினட் அமைச்சர்கள் - ப.சிதம்பரம், ஜிகே வாசன் ( காங்கிரஸ்)
தயாநிதி மாறன், முக அழகிரி, ராஜா,
இணை அமைச்சர்கள் - நாராயணசாமி - புதுவை (காங்கிரஸ்)
பழனிமாணிக்கம், காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன்
Showing posts with label மத்திய அமைச்சரவை. Show all posts
Showing posts with label மத்திய அமைச்சரவை. Show all posts
Thursday, May 28, 2009
Subscribe to:
Posts (Atom)
0
comments

